சுடச்சுட

    

    புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய காப்பீடு: ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் அறிமுகம்

    By  சென்னை,  |   Published on : 13th June 2015 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    26

    புற்றுநோயின் ஆரம்ப நிலை, முற்றிய நிலையில் போதிய நிதிப் பாதுகாப்பு வழங்கும் முயற்சியாக "புற்றுநோய்ப் பாதுகாப்பு' என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை "ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்' காப்பீட்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என அந்த நிறுவனத்தின் முதுநிலை செயல் துணைத் தலைவர் சஞ்சய் திரிபாதி (படம்) தெரிவித்தார்.
     சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் சராசரியாக ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்குக் காரணமாக உள்ள நோய்களில் புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது.
     இந்த நோயை குணப்படுத்தத் தொடக்க நிலையிலேயே, அதைக் கண்டறிந்து உரிய சிகிச்சைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும்.
     பெரும்பாலானவர்கள் போதிய நிதியின்மை காரணமாக, தேவையான நேரங்களில் சிகிச்சை பெறுவதில்லை. புற்றுநோயின் ஆரம்ப நிலை, முற்றிய நிலையில் போதிய நிதிப் பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் "ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்' காப்பீட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, புற்றுநோய்ப் பாதுகாப்பு என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை இப்போது அறிமுகம் செய்கிறது.
     புற்றுநோய் சிகிச்சை தொடர்பான விரிவான காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் ஒரே ஆயுள் காப்பீட்டு நிறுவனம், "ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்'. தீவிர நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் திட்டம் மாறுபட்டதாகும்.
     புற்றுநோயின் ஆரம்ப நிலை, முற்றிய நிலை பரிசோதனைகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்குவதோடு, எதிர்கால காப்பீட்டுத் தொகையிலும் தள்ளுபடி வாய்ப்பும் உண்டு. மேலும் நோய் கண்டறிதலுக்கான தொகையும் அளிக்கப்படும்.
     ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டுத் தொகையை 10 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. இந்தத் திட்டத்துக்கான பிரீமியத்துக்கு வருமான வரி விலக்கு உண்டு. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு நீண்ட மருத்துவ முறைகள் தேவையில்லை. எட்டு எளிதான கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனே இணைந்துவிடலாம். இந்தத் திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்க முடியும். புற்றுநோய் பாதுகாப்புத் திட்டத்தில் சில்வர், கோல்ட், பிளாட்டினம் என மூன்று வகைகள் உள்ளன.
     திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை நிறுவனத்தின் வலைதளம், "ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்' எம்பிஓஎஸ் செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் வாயிலாக அறியலாம் என்றார் அவர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai