சுடச்சுட

  

  ரூ. 8,000 கோடி முதலீட்டில் ஐ.டி.சி. விரிவாக்கத் திட்டம்

  By  ஹைதராபாத்,  |   Published on : 13th June 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரூ. 8,000 கோடி முதலீட்டில் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட ஐ.டி.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
   ஐ.டி.சி. நிறுவனத் தலைவர் ஒய்.சி. தேவேஷ்வர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
   ரூ. 800 கோடி முதலீட்டில் ஹைதராபாதில் புதிய சொகுசு ஹோட்டலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ஐடிசி பத்ராசலம் காகித ஆலையை விரிவுபடுத்தவுள்ளோம். தற்போது இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் பேப்பர்போர்டு, 1.4 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. பல வகை சிறப்புக் காகிதங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ரூ. 4,500 கோடி மதிப்பில் இந்தக் காகித ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ரூ. 800 கோடி முதலீட்டில் உணவு பதப்படுத்தும் ஆலையொன்றை அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். இந்த ஆலை அமைப்பதற்கான இடத்தை இன்னும் முடிவு செய்யவில்லை. நிதியைப் பொருத்தவரை ஐ.டி.சி. நிறுவனத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது ரூ. 17,000 கோடி ரொக்கம் கைவசமுள்ளது என்றார் அவர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai