சுடச்சுட

    

    வங்கிகளுக்கான கூடுதல் மூலதனத் தொகையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

    By  புது தில்லி,  |   Published on : 13th June 2015 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளில் கூடுதல் மூலதனம் செலுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையை அதிகரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
     பல்வேறு நிதி நிலைத் தேவைகளை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் கூடுதல் மூலதனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப, வங்கியின் அடிப்படை மூலதனத்தை அதிகரிக்கவும் கூடுதல் மூலதனம் செலுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த பல்வேறு வங்கிகளுக்கு மொத்தமாக ரூ. 7,940 கோடியை கூடுதல் மூலதனமாகச் செலுத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த தொகை வங்கிகளுக்குப் போதுமானதல்ல என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
     புது தில்லியில் இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டிருப்பதைவிடக் கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. வங்கிகளுக்குத் தற்போதுள்ள வாராக் கடன் பிரச்னையை சமாளித்த பின்னர்தான், கூடுதல் மூலதனத் தொகையைக் கைவசமாக வைத்திருக்க முடியும். வாராக் கடன்களை சரிகட்டும் நடவடிக்கை முக்கிய இடம் வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு கூடுதல் மூலதனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
     செயல்பாட்டுத் திறனின் அடிப்படையில், பொதுத் துறையைச் சேர்ந்த 9 வங்கிகளில் கடந்த ஆண்டு ரூ. 6,990 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்பட்டது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai