சுடச்சுட

    

    இந்தியா ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

    By மும்பை  |   Published on : 14th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Vishakha

    குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பணம் அளிக்கும் "கேஷ் பேக்' திட்டத்தை இந்தியா ஃபர்ஸ்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    பாங்க் ஆஃப் பரோடா, ஆந்திர வங்கி மற்றும் பிரிட்டனின் லீகல் & ஜெனரல் நிதி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆர்.எம்.விசாகா புதிய திட்டத்தை அறிமுகம் செய்து தெரிவித்ததாவது:

    குறைந்த காலத்துக்கு முதலீடு செய்து, நீண்ட காலம் பயன் பெறும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளோம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் "கேஷ் பேக்' முறையில் கிடைக்கும் ஈவுத்தொகை மூலம், வீட்டு வசதி, திருமணம், கல்விக் கட்டணம், மருத்துவச் செலவு உள்ளிட்ட வாடிக்கையாளரின் பல்வேறு செலவுகளை மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சமாக மாதத்துக்கு ரூ. 522 தொகையைச் செலுத்தும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக, 9 ஆண்டு திட்டத்துக்கு 5 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் போதும். 3-ஆவது, 6-ஆவது ஆண்டுகளின் முடிவில் காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் வழங்கப்படும். ஒன்பதாம் ஆண்டு முடிவில் 60 சதவீத காப்பீட்டு தொகையுடன், 5 சதவீத அடிப்படையில் கேரண்டீட் அடிஷன் வகையில் கூடுதல் தொகையும் வழங்கப்படும். காலாண்டு, அரையாண்டு, ஆண்டு விகிதத்தில் பிரீமியம் செலுத்தலாம். இதற்கு வருமான வரி விலக்கு உண்டு.

    இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில், பாங்க் ஆஃப் பரோடா 44 சதவீதமும், ஆந்திர வங்கி 30 சதவீதமும், லீகல் & ஜெனரல் 26 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. மாநகரங்கள், சிற்றூர்கள் என நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வங்கிகளுடன் இணைந்து, நாடு தழுவிய அளவில் அவற்றின் 8,653 கிளைகள் வழியாக எங்களது ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்து வருகிறோம். கடந்த நிதி ஆண்டின் இறுதி வரையில் 79 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளோம். 2014-2015 நிதி ஆண்டின் இறுதியில், எங்கள் காப்பீட்டு நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 8,118 கோடியாகும் என்று அவர் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai