சுடச்சுட

  

  சரக்கு- சேவை வரி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்: சிஐஐ

  By புது தில்லி,  |   Published on : 14th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சரக்கு, சேவை வரி விதிப்பு முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தெரிவித்தது.

  சரக்கு, சேவை வரி விதிப்பு தொடர்பாக புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்கையொட்டி நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய சி.ஐ.ஐ. ஹிமாசலப் பிரதேச மாநில கவுன்சில் தலைவர் ராஜீவ் அகர்வால் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

  சரக்கு, சேவை வரி முறையானது, இந்திய வரி விதிப்பு முறையில் குறிப்பிடத் தக்க சீர்திருத்தமாகும். நாட்டின் தொழிலகங்களும், வரி விதிப்பு முறைகளும் செயல்படும் முறையில் பெரும் மாற்றம் ஏற்படும். இந்த வரி விதிப்பு முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும். இந்தியா முழுவதும் அது நடைமுறைக்கு வரும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 1.5 சதவீதம் வரை கூடுதல் வளர்ச்சி பெறும் என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai