சுடச்சுட

  
  arrow

  கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் 343 புள்ளிகள் சரிவுற்றது.

  பணவீக்க அதிகரிப்பு குறித்த அச்சம், பருவ மழைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதலீட்டாளர்கள் இடையே உற்சாகமின்மை காணப்பட்டது எனக் கூறப்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக பங்குச் சந்தையில் தொய்வு நிலை நிலவி வருகிறது. மூன்று வாரங்களில் சென்செக்ஸில் 1,532 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 5.48 சதவீத இழப்பாகும்.

  அமெரிக்க ரிசர்வ் வங்கி, அந்த நாட்டின் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை செப்டம்பர் மாதமே அதிகரிப்பதாக அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய தாக்கம் முதலீட்டாளர்களை சிந்திக்க வைத்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் சீன நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு, இந்திய முதலீட்டாளர்களை கவலை அடையச் செய்தது.

  எனினும், ஏப்ரல் மாதத்துக்கான தொழிலக உற்பத்தி விகிதம் 4.1 சதவீதம் அதிகரித்ததாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து, வரும் வாரத்தில் பங்குச் சந்தை ஏற்ற நிலைக்குத் திரும்பும் எனக் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

  சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 நிறுவனங்களில், 23 நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்தது. மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லாவின் பங்கு விலை அதிகபட்சமாக 6.49 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

  மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 10,888.10 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. முந்தைய வார வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 16,643.47 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.

  தேசிய பங்குச் சந்தை

  தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 131 புள்ளிகள் சரிவுற்று, நிஃப்டி குறியீடு 7,982 என நிலைத்தது.

  பங்குச் சந்தையின் 12 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளும் இழப்பை சந்தித்தன. வீட்டு வசதி, நுகர்வோர் பொருள், சுகாதாரம், உலோகம், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கூடுதல் இழப்பை சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 67,957.63 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. முந்தைய வார வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 82,255.38 கோடியாக இருந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai