Enable Javscript for better performance
ஆர்-காம், சிஸ்டெமா இணைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை- Dinamani

சுடச்சுட

    

    ஆர்-காம், சிஸ்டெமா இணைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை

    By  புது தில்லி,  |   Published on : 16th June 2015 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்), நிறுவனத்துடன், இந்தியாவில் செயல்படும் ரஷிய தொலைத் தொடர்பு நிறுவனமான சிஸ்டெமா இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
     இத்தகவலை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திங்கள்கிழமை வெளியிட்டது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் மேற்கொண்டு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
     அதே வேளையில், சிஸ்டெமா இந்தியா நிறுவனம் இந்தத் தகவலை உறுதி செய்தது. ஆனால், எந்த அடிப்படையில் இரு நிறுவனங்களின் இணைப்பு நிறைவேறும் என்பது குறித்து மேற்கொண்டு விவரம் எதையும் கூற மறுத்துவிட்டது.
     சிஸ்டெமா சியாம் டெலிசர்வீஸஸ் பெயரில் பெறப்பட்டுள்ள அலைக்கற்றை உரிமங்களை ரிலையன்ஸ் பயன்படுத்துவதற்கு ஈடாக, ரிலையன்ஸின் பங்குகள் சிஸ்டெமாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இணைப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கட்டங்களிலான ஆய்வுகளுக்குப் பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
     ரிலையன்ஸýக்கு நாடு முழுவதும் 10.94 கோடி வாடிக்கையாளர்களும், சிஸ்டெமாவுக்கு 88 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவ்விரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வரிசையில் 4-ஆம் இடத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வகிக்கும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai