Enable Javscript for better performance
பங்குச் சந்தையில் 161 புள்ளிகள் உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 161 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது.
     தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் இறங்குமுகமாகக் காணப்பட்ட சென்செக்ஸ் குறியீடு மீண்டும் லாபகரமான பாதையில் திரும்பியது.
     ஏப்ரல் மாதத்துக்கான தொழிலக உற்பத்தி விகிதம் 4.1 சதவீதம் வளர்ச்சி பெற்றதாக கடந்த வாரம் புள்ளிவிவரம் வெளியானது. இதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் இவ்வரம் எழுச்சி இருக்கக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும்விதமாக திங்கள்கிழமை வர்த்தகம் சாதக நிலையில் நடைபெற்றது.
     மேலும், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து ஏழாவது மாதமாக, பூஜ்ய நிலைக்கும் குறைவாக, (-)2.36 சதவீதம் என்ற அளவில் இருந்தது என புள்ளிவிவரம் வெளியானது. இது முதலீட்டாளர்கள் இடையே சாதகமான மன நிலையைத் தோற்றுவித்தது.
     எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் இந்தியாவை வேதாந்தா குழுமத்துடன் இணைப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கெய்ர்ன் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதையடுத்து, அதன் பங்கு விலை 3.79 சதவீதம் அதிகரித்தது. அதே வேளையில், வேதாந்தாவின் பங்கு விலை 1.49 சதவீதம் குறைந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஸன் ஃபார்மா, பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எஃப்.சி. ஆகியவற்றின் பங்கு விலை 2 சதவீதத்துக்கு மேல் உயர்வு பெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் 1.33 சதவீதம் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 31 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 8,013 என நிலைத்தது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai