சுடச்சுட

  

  மே மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் கீழே (-)2.36 சதவீதமாகக் குறைந்தது என்று மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வந்தது.
   மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதமானது, தொடர்ந்து ஏழாவது மாதமாகப் பூஜ்ய நிலைக்கும் கீழே குறைந்துள்ளது. எரிபொருள், உணவுப் பொருள்கள், தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததன் எதிரொலியாக பணவீக்க விகிதம் குறைவாக உள்ளது.
   புது தில்லியில் மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாவது: உருளைக்கிழங்கின் விலை கடந்த மே மாதம் 52 சதவீதம் குறைந்தது. புரதம் நிறைந்த முட்டை, இறைச்சி,மீன், பால், பழங்கள், அரிசி, பருப்பு வகைகளின் விலையும் குறைந்து காணப்பட்டன. மொத்த விலை அடிப்படையில், உணவுப் பொருள்களின் பணவீக்கம் 3.8 சதவீதமாக இருந்தது.
   முந்தைய மாதமான ஏப்ரலில் மொத்த விலையிலான பணவீக்க விகிதம் (-)2.65 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்குக் குறைவாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.
   மே மாதத்தின்போது, சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 5.01 சதவீதமாக இருந்தது. சென்ற ஆண்டு மே மாத்தின்போது, இது 6.18 சதவீதமாக இருந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai