சுடச்சுட

    

    சென்னை அருகே டெல் ஆலை விரிவாக்கம்: அரசுடன் பேச்சுவார்த்தை

    By சென்னை,  |   Published on : 17th June 2015 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை அருகே உள்ள டெல் கணினி நிறுவனத்தின் ஆலையை விரிவாக்குவது தொடர்பாக அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
     டெல் நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.கிருஷ்ணகுமார் இது குறித்து தெரிவித்ததாவது: இந்தியாவில் கணினி, மடிக் கணினி (லேப்-டாப்) ஆகியவற்றுக்கான தேவை ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. நாட்டின் சிறு நகரங்களிலும் சிற்றூர்களிலும் கணினிகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
     இதற்காக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.
     டெல் நிறுவனம், கிரேஹவுண்ட் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து "வளர்ந்து வரும் இந்தியாவில் கணினி பயன்படுத்துவர்களின் போக்கு' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு குறித்து கிருஷ்ணகுமார் கூறியதாவது:
     தற்போதைய சூழலில் செல்லிடப்பேசியில் கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதி பெருகிவிட்டாலும், அது கணினியின் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. எளிதான பயன்பாடு, அகன்ற திரை, விரைவாக தட்டச்சு செய்யும் வசதி, ஒரே நேரத்தில் பல்வேறு தகவல்களை தேடுதல் உள்பட குறிப்பிடத்தக்க வசதிகள் இருப்பதால் கணினி, மடிக்கணினி ஆகியவற்றின் விற்பனை ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வில் தெரிய வந்ததாக கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai