சுடச்சுட

    

    பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 3% பங்கு விற்பனை: மத்திய அரசு திட்டம்

    By  புது தில்லி  |   Published on : 17th June 2015 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுத் துறையைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 3 சதவீதப் பங்கை விற்பனை செய்து, சுமார் ரூ. 1,800 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
     இத்தகவலை மத்திய நிதித் துறை அமைச்சக வட்டாரங்கள் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. இது தொடர்பான அமைச்சரவைக் குறிப்பை மத்திய நிதி அமைச்சம் அளித்துள்ளது. நாட்டில் இரண்டாவது பெரிய பெட்ரோலிய நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் 3 சதவீதப் பங்குகளை (சுமார் 2.16 கோடி பங்குகள்) விற்பனை செய்ய அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் மத்திய அரசு இப்போது 54.93 சதவீத பங்கினை வைத்துள்ளது.
     தற்போது பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை ரூ. 820 ஆக உள்ளது. இந்த நிலையில், 3 சதவீதப் பங்கு விற்பனை மூலம் ரூ. 1,778 கோடி திரட்ட முடியும் என அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     மும்பை, கொச்சி ஆகிய நகரங்களில் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ள இந்நிறுவனத்தின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் 2.15 கோடி டன் ஆகும். ஓமான் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து மத்திய பிரதேசத்தில் ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ளது. இதன் உற்பத்தித் திறன் 60 லட்சம் டன் ஆகும். மேலும், எரிபொருள் விற்பனைக்கு நாடு முழுவதும் 12,809 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.
     குறிப்பிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் சிறிய அளவிலான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், நடப்பு நிதியாண்டில் ரூ. 69,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி., பி.எச்.இ.எல்., என்.டி.பி.சி., இந்தியன் ஆயில், நால்கோ, என்.எம்.டி.சி. ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் சிறிய அளவு பங்கு இந்த ஆண்டு விற்பனை செய்யப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai