சுடச்சுட

  
  15

  ரெனோ நிறுவனத்தின் "லாட்ஜி' பிரீமியம் வகை காரின் இரு மாடல்கள் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகமாகின.
   மல்ட்டி பர்பஸ் வாகனமான (எம்.பி.வி.) "லாட்ஜி பிரீமியம் ஸ்டெப்வே' கார்கள் இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டன.
   நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுமித் ஸாஹனி, இரு மாடல்களை அறிமுகம் செய்து கூறியதாவது:
   சர்வதேச தரத்திலான வசதிகளுடன் லாட்ஜி ஆர்எக்ஸ்-110 ரக கார்களில் 7 இருக்கைகள், 8 இருக்கைகள் கொண்ட மாடல்கள் அறிமுகமாகின்றன. வாகனத்தின் பின் புறக் காட்சியை ஓட்டுநருக்குத் தெரிவிக்கும் கேமரா, அதிநவீன பவர் ஸ்டியரிங் மற்றும் பிரேக் வசதி, ஓட்டுநருக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் "ஏர்பேக்' (காற்றுப்பை) வசதி உள்ளன. புதிய மாடல்களின் விற்பனையக விலை ரூ. 11.99 லட்சம் முதல் ரூ. 12.29 லட்சம் வரை இருக்கும். ரெனோ நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியில் "லாட்ஜி' மாடல் முக்கியப் பங்கு வகிக்கும்.
   இந்திய சந்தையில், ரூ. 4 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள சிறு கார்கள் 40 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன. அதைக் கருத்தில் கொண்டு, புதிய சிறு ரகக் காரை இவ்வாண்டு அறிமுகம் செய்யவிருக்கிறோம். அதன் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிறு ரகக் கார் சந்தையில் ஐந்து சதவீத இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
   கடந்த ஏப்ரல் மாதத்தில் "லாட்ஜி' எம்.பி.வி.க்கள் ஏழு ரகங்களில் அறிமுகமாகின. 85 எச்.பி. முதல் 110 எச்.பி. வரை திறன் கொண்ட இந்த வாகனத்தின் ஆரம்ப விலை ரூ. 8.19 லட்சமாகும்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai