சுடச்சுட

    

    ஐஷர் போலாரிஸ் நிறுவனத்தின் புதிய வாகனம் "மல்டிக்ஸ்'

    By  புது தில்லி,  |   Published on : 19th June 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14

    ஐஷர் போலாரிஸ் கூட்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்பான "மல்டிக்ஸ்' வர்த்தக வாகனத்தின் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
     புது தில்லியில் இதன் விற்பனையைத் தொடங்கி வைத்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சித்தார்த் லால் கூறியதாவது:
     ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் அமெரிக்க நிறுவனமான போலாரிஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ஐஷர் போலாரிஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரு நிறுவனங்களும் சம பங்கு வைத்துள்ள இந்நிறுவனத்துக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஆலை உள்ளது. ஆண்டுக்கு 60,000 வாகனங்கள் உற்பத்தித் திறன் கொண்டது இந்த ஆலை.
     தனிப்பட்ட முறையில் சிறு நிறுவனங்களை நடத்தி வரும் 5.8 கோடி தொழிலதிபர்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களுக்கென பிரத்தியேக ரக வாகனத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தியாவில் பல வகைப் பயன்பாடு உள்ள வர்த்தக வாகனங்களில் புதிய சந்தையை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
     அதன் கீழ் புதிய "மல்டிக்ஸ்' மாடலை அறிமுகம் செய்திருக்கிறோம். இதில் 511 சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சரக்கு ஏற்றிச் செல்வதுடன், 5 பயணிகள் பயணம் செய்ய இயலும்.
     இதில் பொருத்தப்பட்டுள்ள ஜெனரேட்டர் மூலம் 3 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு அந்த தொழிலதிபர் தனது வீடு அல்லது அவருடைய சிறு நிறுவனம் செயல்படும் இடம், தண்ணீர் இறைக்கும் பம்புகள், துளையிடும் இயந்திரங்கள் போன்ற சிறு இயந்திரங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடியும்."மல்டிக்ஸின்' விற்பனையக விலை ரூ. 2.32 லட்சமாக இருக்கும். நாடு முழுவதும் 30 நகரங்களில் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும் என்று கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai