சுடச்சுட

  

  கடன் விண்ணப்பத்துக்கு 10 விநாடிகளில் ஒப்புதல்: எச்.டி.எஃப்.சி. வங்கி திட்டம்

  By புது தில்லி,  |   Published on : 19th June 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இணையதளம் வழியாக வாடிக்கையாளர்கள் கடன் பெற விண்ணப்பித்த 10 விநாடிகளில் ஒப்புதல் அளிக்கும் திட்டத்தை எச்.டி.எஃப்.சி. வங்கி அறிமுகம் செய்தது.
   வங்கியின் பிணையற்ற மற்றும் வீட்டுக் கடன் பிரிவின் தலைவர் அரவிந்த் கபில், இது தொடர்பாக புது தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:
   இணையதள முறை அல்லது மொபைல் முறையில் எங்களது வங்கியின் சேவைகளைப் பெற்று வருபவர்கள் இந்த வகை சிறு கடன்களை உடனடியாகப் பெறலாம். வங்கியின் கோ-டிஜிட்டல் தளத்தில் இந்த சேவை அளிக்கப்படுகிறது. காகிதமே இல்லாமல், முற்றிலும் இணைய வழியில் இந்தப் பரிவர்த்தனை இருக்கும்.
   எந்தச் சிக்கலும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இந்தக் கடனளிப்புத் திட்டம் செயல்படும். கடன் விண்ணப்பம் அளித்துவிட்டு, நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. மருத்துவச் செலவு போன்ற அவசரத் தேவைகளுக்கு இனி வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இணைய வழியில் விண்ணப்பித்த 10 விநாடிகளில் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
   கடந்த நிதி ஆண்டில் எச்.டி.எஃப்.சி வங்கியின் மொத்த பரிவர்த்தனையில் 63 சதவீத அளவு இணையதளம் வழியாக நடைபெற்றது என்றார் அவர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai