Enable Javscript for better performance
குழந்தைகளுக்காக ரிலையன்ஸ் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகளுக்காக ரிலையன்ஸ் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

    By  சென்னை,  |   Published on : 19th June 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில், குழந்தைகளுக்கான "ரிலையன்ஸ் எஜுகேஷன் பிளான்' என்ற புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
     இது குறித்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி மனோரஞ்சன் சாஹு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது குழந்தையின் கல்வி, பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை வழங்கும் காப்பீட்டுத் திட்டமாகும். பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் இதில் சேரலாம். காப்பீடு முதிர்வு பெறும் காலம் வாடிக்கையாளரின் 30-ஆவது வயது வரை இருக்கலாம்.
     காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் பெற்றோரின் வயது 20 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
     காப்பீட்டுக் காலம் முடிவுறும்போது முதிர்வுத் தொகையை மொத்தமாகப் பெறுவது, முதுகலைப் பட்டம் பெறும்போது இரண்டு தவணைகளாகவும், தொழில் முறைப் படிப்பை பயின்றால் நான்கு தவணைகளாகவும் பெறுவது எனப் பல்வேறு வழிகளில் காப்பீட்டு முதிர்வுத் தொகையைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் காப்பீட்டுக் காலம் 9 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். பிரீமியத் தொகையை 5,7,10 ஆகிய ஆண்டுகளில் அல்லது காப்பீட்டுக் காலம் முடிவடையும் வரை செலுத்தலாம் என்றார் அவர்.
     அனில் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேபிடலின் கீழ் இந்தக் காப்பீட்டு நிறுவனம் செயல்படுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai