சுடச்சுட

    

    ஜெர்மனியைச் சேர்ந்த டாய்ட்ச் வங்கியின் இந்தியப் பிரிவு கடந்த நிதி ஆண்டில் பெற்ற நிகர லாபம் 93 சதவீதம் அதிகரித்து ரூ. 1,406 கோடியாக உள்ளது எனத் தெரிவித்தது.
     வங்கியின் இந்தியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி ரவ்நீத் கில் மும்பையில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
     எங்கள் வங்கிக்கு இந்தியாவில் 17 கிளைகள் உள்ளன. வழக்கமான வங்கி சேவைகள் தவிர, பங்கு வர்த்தகம் உள்ளிட்ட நிதி சேவைகளையும் பிற கிளைகள் வழியாக அளித்து வருகிறோம். கடந்த 2014-2015 நிதி ஆண்டில் கடன் அளிப்பு 25 சதவீதம் அதிகரித்தது. சிறு கடன்கள், பெருந்தொகைக் கடன்கள் ஆகிய இரு வகைக் கடன் அளிப்பும் அதிகரித்தன. வைப்புத் தொகை மதிப்பு 48 சதவீதம் அதிகரித்தது. மொத்த வருவாய் ரூ. 61,597 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ. 1,406 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 93 சதவீத வளர்ச்சியாகும். வாராக் கடன் விகிதம் 0.13 சதவீதம் என்ற நிலையில் கட்டுப்படுத்தப்பட்டது என்றார் அவர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai