சுடச்சுட

  

  "சர்வதேச வங்கி விதிமுறைகளை எதிர்கொள்ள அரசுப் பங்குகளின் விற்பனை மட்டும் போதாது'

  By புது தில்லி,  |   Published on : 20th June 2015 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நிதிச் செயல்பாடுகள் குறித்து "பேஸல்-3' எனும் சர்வதேச விதிமுறைகளை இந்திய பொதுத் துறை வங்கிகள் பின்பற்றுவதற்கு, அரசுப் பங்குகளை விற்பது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஃபேர்பேக்ஸ் நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.
   இந்திய பொதுத் துறை வங்கிகள் தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
   தற்போது அரசுக்கு சொந்தமாக 27 வங்கிகள் உள்ளன. 2019-ஆம் ஆண்டுக்குள் சர்வதேச வங்கி விதிமுறைகளைப் பின்பற்றும் விதத்தில் போதிய அளவு மூலதனத்தைத் திரட்டுவதற்காக, அவ் வங்கிகளில் அரசுக்குச் சொந்தமான பங்கை 52 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
   பங்குகளை பொதுப்பங்காக விற்பதன் மூலமாக, வங்கியின் மூலதனத்தைப் பெருக்கலாம் எனத் திட்டமிடப்படுகிறது. ஆனால் இதனால் மட்டுமே நிதிச் செயல்பாடுகள் தொடர்பான சர்வதேச விதிமுறைகளை எதிர்கொண்டுவிட முடியாது.
   அடுத்த 5 ஆண்டுகளுக்கான மூலதனம் திரட்டும் திட்டத்தை வங்கிகள் தெளிவாக வகுக்க வேண்டும். நிர்வாகக் குழுச் செயல்பாடுகள் குறித்த புதிய அணுகுமுறைகளை வங்கிகள் கையாள வேண்டும். அரசு மற்றும் நிறுவன முறையிலான முதலீட்டாளர்களுக்கு, வங்கியின் நிர்வாகக் குழுவில் வெவ்வேறு விதமான வாக்குரிமைகள் எனும் முறை அறிமுகப்படுத்துவதைக் குறித்து சிந்திக்க வேண்டும்.
   டியர்-1 எனும் வங்கியின் அடிப்படை சொத்து குறித்த விதிமுறைகளுக்கு ஏற்ப, வங்கிகளுக்கு சுமார் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான மூலதனம் தேவைப்படும். இதில் பாதித் தொகை வங்கியின் நிரந்தரப் பங்கு மூலதனமாக இருக்க வேண்டியுள்ளது. கூடுதல் மூலதனம் பெறுவதற்காக வங்கிகள், நீண்ட காலக்கெடுவுள்ள கடன் பத்திரங்கள் வெளியிடலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   2019 மார்ச்சில் முடிவுறும் நிதி ஆண்டுக்குள், "பேஸல்-3' விதிமுறைகளை இந்திய வங்கிகள் முற்றிலும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டியுள்ளது. அப்போது மூலதனம், நிதிச் செயல்பாடுகள் உள்ளிட்ட பேஸல் சர்வதேச விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் நாட்டின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இந்திய வங்கிகள் 200 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான (சுமார் ரூ. 12 லட்சம் கோடி) கூடுதல் மூலதனத்தைத் திரட்ட வேண்டி வரும் என ஃபிட்ச் நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai