Enable Javscript for better performance
பங்குச் சந்தையில் 200 புள்ளிகள் உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 200 புள்ளிகள் உயர்வு பெற்றது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 27,316 என நிலைத்தது.
     காலையில் வர்த்தகம் தொடங்கியபோதே, சென்செக்ஸ் லாபகரமான நிலையில் காணப்பட்டது. அதிகபட்ச அளவாக 27,404 புள்ளிகள் என்ற நிலையைத் தொட்ட போதிலும், வர்த்தக இறுதியில், லாப நோக்குடன் முதலீட்டாளர்கள் அதிக அளவிலான பங்குகளை விற்பனை செய்ய முன் வந்ததால், சென்செக்ஸ் குறியீட்டில் இறக்கம் ஏற்பட்டது.
     வார அளவில் சென்செக்ஸ் குறியீடு 890 புள்ளிகள் உயர்வு பெற்றது.
     அமெரிக்க ரிசர்வ் வங்கி அந்நாட்டுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இது உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சாதகமான நிலையைத் தோற்றுவித்தது.
     எச்.டி.எஃப்.சி., ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல், எச்.டி.எஃப்.சி. வங்கி, வேதாந்தா, ஐ.டி.சி., டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ், விப்ரோ, பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது.
     தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 50 புள்ளிகள் உயர்வு பெற்றது. வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 8,224 என நிலைத்தது. வார அளவில் நிஃப்டி குறியீடு 242 புள்ளிகள் உயர்வு பெற்றது.
     இந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், நிகர அளவில் ரூ. 784.73 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,110.01 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai