சுடச்சுட

  

  புதிய இ-வர்த்தக நிறுவனங்களின் பங்கு மதிப்பு: ரத்தன் டாடா கவலை

  By  மும்பை,  |   Published on : 20th June 2015 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அண்மைக் காலமாக இணைய வழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள் நிறுவனங்கள் தங்களது பங்குகளுக்கு மிக அதிக மதிப்பை நிர்ணயம் செய்வதாக டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் ரத்தன் டாடா குறை கூறியுள்ளார்.
   மும்பையில் இந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் 107-ஆவது ஆண்டு நிறைவ நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
   புதிய இணையதள நிறுவனங்கள் தங்களது பங்குகளுக்கு மிக அதிகமான விலையை நிர்ணயம் செய்கின்றன. முன் காலத்தில் ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் அதனை மதிப்பை அளவிடுவது வழக்கம்.
   ஆனால் இப்போது நிறுவனர்களே தங்களது இணையதள நிறுவனங்களுக்கு மதிப்பை நிர்ணயம் செய்கின்றனர். அவர்கள் நிர்ணயிக்கும் தொகை அதிகப்படியாக உள்ளது.
   புதிய தொழில்முனைவோருக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியம்தான். இந்திய தொழில்முனைவோரை நாம் ஊக்குவிக்க வேண்டும். பாரம்பரிய முறையிலான தொழிலகங்களுடன் இணையதள நிறுவனங்களும் போட்டியிட்டு செயல்பட வேண்டியுள்ளது. புதிய இணையதள வர்த்தக நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது. அந்நிறுவனங்களின் செயல்பாடு சந்தேகத்துக்குரிய முறையில் இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றார் அவர்.
   இ-வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் உள்ளிட்ட பல இணைய வழிச் செயல்பாடுகள் உள்ள நிறுவனங்களில் ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai