சுடச்சுட

    

    நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு 1.57 பில்லியன் டாலர் அதிகரித்து 354.29 பில்லியன் டாலராக உள்ளது.

    ரிசர்வ் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களிலிருந்து இது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஜூன் 12-ஆம் தேதி முடிவுற்ற வாரத்தில் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்புத் தொகை 1.57 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 9,900 கோடி) அதிகரித்தது. மொத்த கையிருப்புத் தொகையின் மொத்த மதிப்பு 354.29 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 22.32 லட்சம் கோடி) இருந்தது.

    முந்தைய வார இறுதியில் (ஜூன் 5) அன்னியச் செலாவணிக் கையிருப்பு 352.71 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 22.22 லட்சம் கோடி) இருந்தது.

    தங்கம் கையிருப்பைப் பொருத்தவரையில், ஜூன் 12-ஆம் தேதி முடிவுற்ற வாரத்தில் அதன் மதிப்பு 19.34 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 1.21 லட்சம் கோடி) இருந்தது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

    நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு அமெரிக்க டாலர் கரன்சி மதிப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதில் பிரிட்டனின் ஸ்டெர்லிங் பவுண்டு, ஜப்பானின் யென், யூரோ உள்ளிட்ட பிற நாடுகளின் கரன்சி கையிருப்பின் மதிப்பும் சேர்த்துக் கணக்கிடப்படுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai