சுடச்சுட

  

  சர்வதேச முதலீடுகளை ஈர்க்க கர்நாடக அரசு திட்டம்

  By பெங்களூரு  |   Published on : 21st June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலீட்டாளர் மாநாட்டை கர்நாடக அரசு நடத்தவுள்ளது.

  கர்நாடக மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  உலகெங்கிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை, கர்நாடகத்தில் முதலீடு செய்ய வரவேற்கும் விதத்தில், வரும் நவம்பர் மாதத்தில் 3 நாள் முதலீட்டாளர் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

  மாநிலத்தில், தயாரிப்புத் துறை, விமானத் துறை, ஆட்டோ மொபைல், பாதுகாப்புத் துறை, கன ரக தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் "இன்வ்ஸட் கர்நாடகா 2015' என்ற முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  அமெரிக்கா, ஜப்பான், தைவான், மத்திய கிழக்கு நாடுகள், ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள், கூடுதல் கவனம் பெறும் நாடுகளாக இருக்கும்.

  வேளாண், உணவு பதனிடுதல், ஜவுளி, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்து, மின்னணு சாதனங்கள் மற்றும் செமி கண்டக்டர் தயாரிப்பு, உள்கட்டமைப்புத் திட்டங்கள், தனியார் தொழில் பூங்காக்கள், டவுன்ஷிப் ஆகியவற்றிலும் முதலீடுகளை வரவேற்கும் விதத்தில் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக, தொழிலகங்களின் கூட்டமைப்புகள், தொழிலதிபர்கள், இந்திய - பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கர்நாடக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai