சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் சென்ற வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் முன்னேற்றம் காணப்பட்டு, பொதுவாக முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக முடிவுற்றது.

    முந்தைய மூன்று வாரங்களில் மும்பை பங்குச் சந்தை 1,532 புள்ளிகள் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. இது 5.48 சதவீத வீழ்ச்சியாகும். இந்த நிலையில், சென்செக்ஸில் எழுச்சி ஏற்பட்டது. தொழிலக உற்பத்தி விகிதம் வளர்ச்சி அடைந்து வருவது முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. பருவ மழையின் முன்னேற்றமானது, பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது என்றும் முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.வார வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 890 புள்ளிகள் உயர்வு பெற்று, 27,316 என நிலைத்தது. இது 3.37 சதவீத வளர்ச்சியாகும்.

    மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 14,521.82 கோடியாகும்.

    தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 242 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 8,224 என நிலைத்தது. வார அளவில் இது 3 சதவீத உயர்வாகும். சென்ற வாரம் இங்கு நடைபெற்ற வர்த்தகத்தின மதிப்பு

    ரூ. 71,981.97 கோடியாகும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai