சுடச்சுட

    

    ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களுக்கான பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் 12.3 சதவீதம் அதிகரித்து ரூ. 16,326 கோடியாக உள்ளது என்று பொதுக் காப்பீடு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைட்டெட் இந்தியா, ஓரியன்டல், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய 4 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சொந்தமானவை. இது தவிர, தனியார் துறையைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் பொதுக் காப்பீட்டு சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகின்றன.

    நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் பெற்ற மொத்த பிரீமியம் வருவாய் 11 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 8,567 கோடியாக உள்ளது. பொதுக் காப்பீட்டு சந்தையில் இந்நிறுவனங்கள் 54 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன.

    நாட்டில் செயல்பட்டு வரும் 17 தனியார் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் 11.7 சதவீதம் அதிகரித்து, அதன் மதிப்பு ரூ. 6,948 கோடியாக உள்ளது.

    மருத்துவக் காப்பீட்டுப் பிரிவில் அரசு நிறுவனங்களின் வருவாய் அதிகமாக உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் 4 பொதுத் துறை நிறுவனங்கள் ஈட்டிய பிரீமியம் வருவாய் ரூ. 2,877 கோடி. அதே வேளையில் தனியார் நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் ரூ. 1,174 கோடியாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai