சுடச்சுட

    

    மருந்து தயாரிப்பு நிறுவனமான லூபின் லேபரட்டரீஸின் பங்கு மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டது.
     இதையடுத்து, திங்களன்று நடைபெற்ற வர்த்தகத்தின் அந்நிறுவனத்தின் பங்கு விலை ஏறத்தாழ 2 சதவீதம் உயர்வு பெற்றது.
     தனியார் மின்சார உற்பத்தி நிறுவனமான டாடா பவர் பங்குக்கு பதிலாக, லூபின் பங்குகளை சென்செக்ஸில் பட்டியலிடப் போவதாக மும்பை பங்குச் சந்தை கடந்த மே மாதம் 22-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து, டாடா பவர் பங்கு விலை ஏறத்தாழ 5 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.
     அதே சமயத்தில், லூபின் லேபரட்டரீஸ் பங்கு விலை 4.6 சதவீதம் உயர்வு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai