சுடச்சுட

  

  டிவி சேனல்கள் விநியோகம்: ரிலையன்ஸ் ஜியோவுக்கு தாற்காலிக ஒப்புதல்

  By புது தில்லி,  |   Published on : 23rd June 2015 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டிஜிட்டல் கேபிள் வழியாக தொலைக்காட்சி சேனல்களை விநியோகம் செய்வதற்குத் தாற்காலிக ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.
   மும்பை பங்குச் சந்தைக்கு அந்நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
   டிஜிட்டல் முறையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களை விநியோகிக்கும் மல்டி சர்வீஸ் ஆபரேட்டர் (எம்.எஸ்.ஓ) சேவையை நாடு முழுவதும் அளிக்க ரிலையன்ஸ் ஜியோ தாற்காலிக ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த ஒப்புதலை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வழங்கியது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
   ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தொலைத்தொடர்பு சேவைகள், இணையதள வர்த்தகம், தொலைக்காட்சி சேவைகள் அளிக்கும் ஒருங்கிணைந்த நிறுவனமாக உள்ளது.
   4ஜி தொழில்நுட்பத்தில் தொலைத் தொடர்பு சேவைகளை நாடு முழுவதும் வழங்க ரிலையன்ஸ் ஜியோ அலைக்கற்றை உரிமம் பெற்றுள்ளது. அதன் தொலைத் தொடர்பு சேவைகள் வரும் ஜூலை மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
   இந்நிறுவனம், நெட்வர்க்18 என்ற ஊடக நிறுவனத்தை ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அந்த ஊடக நிறுவனம் 17 செய்தித் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. மேலும் 8 மொழிகளில் 14 பொழுதுபோக்கு சேனல்களும் சொந்தமாக உள்ளன. 4ஜி தொலைத் தொடர்பு உரிமத்தின் அடிப்படையில், மொபைல் மற்றும் கேபிள் மூலமாக பல்வேறு சேவைகள் வழங்க இயலும்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai