சுடச்சுட

    

    பார்தி, ஸாஃப்ட்பேங்க், ஃபாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் அறிவிப்பு

    By  புது தில்லி,  |   Published on : 23rd June 2015 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜப்பானின் ஸாஃப்ட்பேங்க், தைவானின் ஃபாக்ஸ்கான் ஆகியவற்றுடன் பார்தி குழுமம் ஆகியவை, புதிய கூட்டு நிறுவனம் அமைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனம் ரூ. 1.25 லட்சம் கோடி முதலீட்டில் சூரிய மின் சக்தி திட்டத்தை அமைக்கப் போவதாக அறிவித்தது.
     புது தில்லியில் திங்கள்கிழமை இது குறித்த அறிவிப்பு வெளியானது.
     தொலைத் தொடர்புத் துறையில் ஈடுபட்டுள்ள ஸாஃப்ட்பேங்க் இதில் பெரும்பான்மை பங்கு வகிக்கும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி மசயோஷி சோன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
     எஸ்.பி.ஜி. கிளீன்டெக் என்னும் இந்த நிறுவனத்தின் கீழ் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்டங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்படும். இதற்கான சூரிய மின் தகடுகள் போன்ற சாதனங்களை ஃபாக்ஸ்கான் தயாரிக்கும். ஜப்பானைவிட இந்தியாவில் சூரிய ஒளி இரு மடங்கு அதிகமாகக் கிடைக்கிறது. மேலும், சூரிய ஒளி மின் திட்டக் கட்டுமானத்தை உருவாக்க ஜப்பானில் ஆகும் செலவைவிட இந்தியாவில் பாதி அளவுதான் ஆகிறது. ரூ. 1.25 லட்சம் கோடி முதலீட்டில் நாடு முழுவதும் சூரிய மின் சக்தி உற்பத்தி திட்டங்கள் அமைக்கப்படும். நிலம் கையகப்படுத்தியது முதல் 2 ஆண்டுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி தொடங்கும் என்றார் அவர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai