சுடச்சுட

  

  எல் & டி இன்ஃபோடெக்கை தனி நிறுவனமாகப் பிரிக்க முடிவு

  By புது தில்லி,  |   Published on : 24th June 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  14

  லார்சன் அண்ட் டூப்ரோ (எல் & டி) நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவான எல் & டி இன்ஃபோடெக்கைத் தனி நிறுவனமாகப் பங்குச் சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஏ.எம். நாயக் தெரிவித்தார்.
   தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
   எல் & டி இன்ஃபோடெக் நிறுவனம் தற்போது லார்சன் அண்ட் டூப்ரோவின் துணை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இதனைத் தனி நிறுவனமாகப் பிரித்து, பங்குச் சந்தையில் பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்த நடவடிக்கை நிறைவேறும்.
   தனி நிறுவனமாகப் பிரித்த பின்னர், அதில் 10 சதவீதப் பங்கு பொதுப் பங்காக வெளியிட வாய்ப்புள்ளது. ஷெவ்ரான், ஹிடாச்சி, சான்யோ உள்ளிட்ட பல முக்கிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது எல் & டி இன்ஃபோடெக். வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் புதிய மையங்களை அமைத்து விரிவாக்கம் செய்து வருகிறது என்று ஏ.எம். நாயக் கூறினார்.
   லார்சன் அண்ட் டூப்ரோவின் முக்கியச் செயல்பாடான பொறியியல் - கட்டுமானத்துக்கு நேரடியாகத் தொடர்பில்லாத பிரிவுகளைத் தனி நிறுவனமாக அமைப்பது குறித்து எல் & டி ஆலோசித்து வருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எண்ணெய், எரிவாயு நிறுவனங்களுக்கான பொறியியல் துறை சேவைகள் வழங்கி வருகிறது எல் & டி ஹைட்ரோ கார்பன் என்ஜினியரிங் நிறுவனம். மின்சார உற்பத்தி, விநியோகத்துக்காகத் தனி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு, நிதி சேவை ஆகியவற்றிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு எல் அண்ட் டி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 1,500 கோடியைக் கடந்தது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai