சுடச்சுட

    
    16

    மஹிந்திரா நிறுவனம் "ஜீத்தோ' என்ற பெயரில் சிறிய ரக சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
     தெலங்கானா மாநிலம், ஜஹீராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா செய்தியாளர்களிடம் கூறியது:
     சிறிய ரக சரக்கு வாகனங்களில் ஒரு டன்னுக்கு குறைவான எடையை ஏற்றிச் செல்ல விரும்பும் வணிகர்களுக்கு ஏற்ற வகையில் மஹிந்த்ரா "ஜீத்தோ' வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு வாகனம் எஸ், எல், எக்ஸ் என 3 பிரிவுகளில் 8 மாடல்களில் விற்பனையாகும்.
     இந்த வாகனம் 11 ஹெச்.பி., 16 ஹெச்.பி. திறன் கொண்ட 2 விதமான எஞ்சின்களைக் கொண்டுள்ளது. குறைந்தபட்சமாக 600 கி.கி., முதல் அதிகபட்சமாக 700 கி.கி எடை வரை ஏற்றிச் செல்லலாம். உறுதியான வடிவமைப்பு, ஓட்டுநருக்கு செüகரியமான இருக்கை வசதி, செல்லிடப்பேசியை சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த வாகனத்தின் பராமரிப்பு செலவும் குறைவு.
     ஓவ்வொரு மாடலுக்கு ஏற்றவாறு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் 27.8 கி.மீ முதல் 37.6 கி.மீ தூரம் வரை இந்த வாகனம் செல்லும். 5 கண்கவர் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வாகனத்தின் விலை ரூ.2.32 லட்சம் முதல் ரூ.2.77 லட்சம் வரை இருக்கும். அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்த வாகனத்தை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai