Enable Javscript for better performance
5 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய வோக்ஸ்வாகன் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    5 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய வோக்ஸ்வாகன் திட்டம்

    By புது தில்லி  |   Published on : 24th June 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    15

    ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் இவ்வாண்டு புதிதாக 5 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
     புதிய நடுத்தர ரகக் காரான வென்டோ செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. நடுத்தர ரகக் கார்களில் நவீன வசதிகள் கொண்ட அந்த சொகுசு மாடலை வோக்ஸ்வாகன் இந்தியா பிரிவின் கார் பிரிவு இயக்குநர் மைக்கேல் மேயர்அறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது:
     வோக்ஸ்வாகனைப் பொருத்தவரையில், இந்தியா மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாகும். புதிய பிரிவுகளில் புதிய மாடல்களைத் தொடர்ந்து இங்கு அறிமுகம் செய்யவுள்ளோம். அடுத்த சில மாதங்களில் 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவாக உள்ள மாடலை அறிமுகம் செய்வோம்.
     உலகின் பல பகுதிகளுக்கும் வோக்ஸ்வாகன் கார்களை ஏற்றுமதி செய்யும் விதத்தில், இந்தியாவை உற்பத்தி மையமாக அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். உள்நாட்டு உதிரி பாகங்களைப் பயன்படுத்துவது அதிகரிக்கப்படும். மகாராஷ்டிர மாநிலத்தில் சாக்கண், ஒüரங்காபாத் ஆகிய இடங்களில் உள்ள எங்கள் ஆலைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்த ரூ. 1,500 கோடி மதிப்பிலான முதலீடுகளைச் செய்யவுள்ளோம். "பஸ்ஸாட்' காரின் 8-ஆவது தலைமுறை மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும். ஸ்போர்ட்ஸ் ரக காரான "டிகுவான்', சிறு ரக காரான "பீட்டில்' ஆகியவற்றையும் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
     இப்போது அறிமுகம் செய்யும் "வென்டோ' கார் பெட்ரோல், டீசன் ஆகிய இரு மாடல்களிலும் விற்பனை செய்யப்படும். இதன் புது தில்லி விற்பனையக விலை ரூ. 7.85 லட்சம் முதல் ரூ. 11.87 லட்சம் வரை இருக்கும். எங்கள் குழுமத்தின் "வோக்ஸ்வாகன்', "ஆடி', ஸ்கோடா, போர்ஷே, லம்போர்கினி ஆகிய கார்கள் இந்தியாவில் இப்போது விற்பனையாகின்றன என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai