சுடச்சுட

  

  இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க லெனோவோ ஆலோசனை

  By கொல்கத்தா,  |   Published on : 26th June 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  15

  சீனாவைச் சேர்ந்த லெனோவோ நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தது.
   லெனோவோ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் பாஸ்கர் செüதுரி இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
   தற்போது இந்திய செல்லிடப்பேசி சந்தையில் ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு 30 சதவீதம்தான். இது பெரும் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு வருங்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும்.
   இந்தியாவில் ஸ்மார்ட்போன்களைத் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். புதுச்சேரியில் தற்போது லெனோவோ கணினிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
   தற்போது கணினிகள், டேப்லட் கணினிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றின் விற்பனையில் லெனோவோ முன்னிலை வகிக்கிறது. ஸ்மார்ட்போன்களின் விற்பனையிலும் முன்னிலை வகிக்கும் விதத்தில் திட்டங்கள் வகுத்து வருகிறோம்.
   லெனோவோ செல்லிடப்பேசிகளை விற்பனை செய்ய பிரத்யேக விற்பனையகங்களை அமைக்கவுள்ளோம் என்றார்.
   மோட்டோரோலா நிறுவனத்தைக் 2.9 பில்லியன் (சுமார் 18 ஆயிரம் கோடி) டாலர் முதலீட்டில் கடந்த ஆண்டு லெனோவோ கையகப்படுத்தியது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில், ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களையடுத்து, மூன்றாவது இடத்தில் லெனோவோ உள்ளது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai