சுடச்சுட

    

    எஸ்.பி.ஐ. தலைமை நிதி அதிகாரியாக அம்சுலா காந்த் நியமனம்

    By புது தில்லி,  |   Published on : 26th June 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16

    பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) தலைமை நிதி அதிகாரியாக அம்சுலா காந்த் நியமிக்கப்பட்டிருப்பதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் அந்த வங்கி தெரிவித்தது.
     அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக அம்சுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். துணை நிர்வாக இயக்குநர் பதவியை வகித்தவாறு அவர் தலைமை நிதி அதிகாரியாகச் செயல்படுவார்.
     பயிற்சி அதிகாரியாக பாரத ஸ்டேட் வங்கியில் 1983-ஆம் ஆண்டு அவர் பணி நியமனம் பெற்றார். அதன் பின்னர் எஸ்.பி.ஐ. பரஸ்பர நிதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.
     முன்னதாக, தலைமை நிதி அதிகாரியாக இருந்த பி.கே.குப்தா, எஸ்.பி.ஐ. கேபிடல் நிதி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்கியின் புதிய தலைமை நிதி அதிகாரியாக அம்சுலா காந்த் நியமனம் பெற்றார் என மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai