சுடச்சுட

    

    கடந்த 2014-2015 நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையாக 160 சதவீதம் அளிக்கவிருப்பதாக பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி அறிவித்தது.
     வடோதராவில் நடைபெற்ற வருடாந்தரக் கூட்டத்தில் அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஞ்சன் தவன் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
     சென்ற ஆண்டு நாட்டின் நிதிச் சந்தை சிக்கலான கால கட்டத்தைக் கடந்த போதிலும், வங்கியின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. சில்லறை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளை மேம்படுத்த பல தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
     ரூ. 2 முகமதிப்புள்ள வங்கியின் பங்குக்கு, ரூ. 3.20 ஈவுத்தொகையாக வழங்க முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது 160 சதவீத ஈவுத்தொகையாகும் என்று அவர் கூறினார்.
     கடந்த 2014-2015 நிதி ஆண்டில் பாங்க் ஆஃப் பரோடாவின் மொத்த வருவாய் ரூ. 47,36,560 கோடியாகும். வரிக்கு முந்தைய லாபம் ரூ. 54,206 கோடி. நிகர லாபம் ரூ. 33,984 கோடியாக இருந்தது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai