சுடச்சுட

    

    பொதுப் பங்கு வெளியிட வோடஃபோன் இந்தியா திட்டம்

    By புது தில்லி,  |   Published on : 26th June 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் இந்தியா அடுத்த ஆண்டு பொதுப் பங்கு வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
     பிரிட்டனைச் சேர்ந்த நிதி முதலீடு மற்றும் ஆய்வு நிறுவனமான என்.எம். ராத்ஸ்சைல்ட் நிறுவனத்தை இது தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு வோடஃபோன் கேட்டுள்ளதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுப் பங்கு வெளியீட்டின் மதிப்பு சுமார் ரூ. 25,000 கோடியாக (சுமார் 4 பில்லியன் டாலர்) இருக்கக் கூடுமென்றும், அடுத்த ஆண்டு பொதுப் பங்கு வெளியிட வாய்ப்புள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
     பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் தனது இந்தியப் பிரிவு நிறுவனத்துக்கான பொதுப் பங்கு வெளியீட்டை நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது. எனினும், வருமான வரி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பங்கு வெளியீட்டை ஒத்திப்போட்டு வந்தது.
     கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனம் இந்தியாவில் சுமார் ரூ. 1.3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டைச் செய்துள்ளது. வோடஃபோன் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு நிறுவனங்கள் வைத்திருந்த சிறுபான்மைப் பங்கை ரூ. 10,141 கோடி முதலீட்டில் 2013-இல் கையகப்படுத்தியது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai