மும்பை பங்குச் சந்தையில் 166 புள்ளிகள் உயர்வு
By மும்பை, | Published on : 26th June 2015 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 166 புள்ளிகள் உயர்வு பெற்றது.
கடந்த 10 வர்த்தக நாட்களில் 9 நாட்கள் லாபகரமாக முடிவுற்றன. கிரேக்க கடன் பிரச்னை சர்வதேச பங்குச் சந்தைகளை பாதித்தபோதிலும், மும்பை பங்குச் சந்தை எந்த பாதிப்பும் இன்றி லாபகரமாகச் செயல்பட்டது. நாள் முழுவதும் ஏற்ற, இறக்கத்தோடு காணப்பட்டாலும், இறுதியில் 166 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் 27,895 என நிலைத்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு விலை 4.65 சதவீதம் அதிகரித்தது. கெயில் நிறுவனத்தின் பங்குகள் 3.44 சதவீதம் லாபம் பெற்றன. எல் அண்ட் டி பங்கு விலை 3.28 சதவீதம் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 37 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 8,423 என நிலைத்தது.