சுடச்சுட

  

  அசோக் லேலண்ட் "தோஸ்த்' விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது

  By  புது தில்லி,  |   Published on : 27th June 2015 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  33

  அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகு ரக வர்த்தக வாகனமான "தோஸ்த்' விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.
   இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி புது தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
   அசோக் லேலண்ட் - ஜப்பானின் நிஸ்ஸான் கூட்டு நிறுவனம் அமைத்து, "தோஸ்த்' வர்த்தக வாகனம் தயாரித்து வருகிறது. செயல்பாடுகள் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் அதன் விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.
   இந்த மாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், தென்னாப்பிரிக்கா, கென்யா, தான்சானியா, மொசம்பிக், மலாவி, மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
   அசோக் லேலண்டின் பல்வேறு மாடல் வர்த்தக வாகனங்களிடையே "தோஸ்த்' அளிக்கும் செயல் திறன் மிகவும் வித்தியாசமானது. எனவேதான் அது விற்பனையாகும் 11 நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai