சுடச்சுட

    

    கேரளத்தில் காலணி தொழில்பூங்கா: மத்திய அரசு திட்டத்தின் கீழ் அமைகிறது

    By  கோழிக்கோடு,  |   Published on : 27th June 2015 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    28

    மத்திய அரசின் தொழில்பூங்கா மண்டலத் திட்டத்தின் கீழ், கேரள மாநிலத்தில் காலணி தொழில்பூங்கா அமைக்கவிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்தது.
     கேரள மாநில தொழிலக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (கின்ஃப்ரா) இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
     உலக அளவில் காலணி உற்பத்தியில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இத்தொழிலில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி காலணித் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் காலணித் தொழில்சாலைகளை அமைத்துள்ளன.
     இந்த நிலையில், மத்திய அரசின் தொழில்பூங்கா மண்டலத் திட்டத்தின் கீழ், காலணித் தயாரிப்பு மற்றும் காலணித் தொழில் மேம்பாட்டுக்காக கேரளத்தில் தொழில்பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
     ரூ. 107 கோடி முதலீட்டில், கோழிக்கோடு நகர் அருகே ராமநாட்டுக்கரையில் காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதற்காக 300 ஏக்கர் பரப்பில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் காலணிகள் தயாரிப்புக்கான வசதிகள் அளிப்பதுடன், அதன் மூலப் பொருள்கள் தயாரிக்கவும் வசதி செய்து தரப்படும்.
     தோல் பொருள்கள் உருவாக்கும் 4 துணை தொழிலகங்களும் இந்த தொழில்பூங்காவில் அமைக்கப்படும். காலணி தொழில்நுட்பப் பயிற்சிக்கான கல்வி நிலையம், வடிவமைப்பு - மேம்பாட்டுப் பயிற்சிக்கான கல்வி நிலையமும் தொழிற்பூங்காவையொட்டி அமைக்கப்படும்.
     காலணி தொழில்பூங்கா முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, சுமார் இரண்டாயிரம் பேர் நேரடியாகவும், சுமார் 3,500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கின்ஃப்ரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai