சுடச்சுட

  

  அரசு வங்கிகளில் மேலும் ரூ.11,500 கோடி மூலதனம் செலுத்த வாய்ப்பு

  By புது தில்லி,  |   Published on : 28th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு வங்கிகளில் 1.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 11,500 கோடி) கூடுதல் மூலதனம் செலுத்த வாய்ப்பிருப்பதாக மத்திய நிதித் துறைச் செயலர் ராஜீவ் மஹரிஷி தெரிவித்தார்.

  பொதுத் துறை வங்கிகளில் கூடுதல் மூலதனமாக ரூ. 7,940 கோடி செலுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக மூலதனம் செலுத்த வாய்ப்பிருப்பதாகத் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  மத்திய நிதித் துறைச் செயலர் ராஜீவ் மஹரிஷி இது தொடர்பாக புது தில்லியில் தெரிவித்ததாவது:

  ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததைவிடக் கூடுதலாக, பொதுத் துறை வங்கிகளில் மூலதனம் செலுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. வங்கிகளின் தேவையின் முக்கியத்துவத்தைப் பொருத்து, பட்ஜெட்டில் அறிவித்ததற்கும் கூடுதலாக மூலதனம் செலுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.

  இதைத் தொடர்ந்து, பொதுத் துறை வங்கிகளின் கூடுதல் மூலதனத் தேவை குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, 14 வங்கிகள் தங்களது கோரிக்கைகளை அரசிடம் அளித்துள்ளன.

  எனவே, ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததைவிட, 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் மூலதனம் (சுமார் ரூ. 11,500 கோடி) பொதுத் துறை வங்கிகளில் செலுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்று ராஜீவ் மஹரிஷி கூறினார்.

  பல்வேறு சர்வதேச விதிமுறைகளை முன்னிட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் கூடுதல் மூலதனமாகச் செலுத்த ரூ. 57,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று ராஜீவ் மஹரிஷி கடந்த மாதம் தெரிவித்திருந்தது நினைவுகூரத் தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai