Enable Javscript for better performance
பங்குச் சந்தையில் தொடரும் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    senes

    மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக முன்னேற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் 495 புள்ளிகளும், நிஃப்டி 156 புள்ளிகளும் உயர்வு பெற்றன.

    வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும், பருவ மழை அளவு சராசரியை விடக் கூடுதலாக இருப்பதன் காரணமாகவும் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

    வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்த்து, வீட்டு வசதிக் கடன் அளிப்பு நிறுவனமான எச்.டி.எஃப்.சி. உள்ளிட்டவற்றின் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே கூடுதல் வரவேற்பு காணப்பட்டது.

    மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 13,051.34 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

    வாரத்தின் தொடக்கத்தில் 27,427 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், ஒரு கட்டத்தில் 27,968 அளவைத் தொட்டது. எனினும், பின்னர் 27,417 என்ற நிலைக்குக் குறைந்தது. வார வர்த்தகத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் மந்த நிலை இருந்தபோதிலும், கடந்த வார வர்த்தகம் ஒட்டுமொத்த அளவில் லாபகரமாகவே நிறைவுற்றது. 495 புள்ளி ஏற்றத்துடன் சென்செக்ஸ் குறியீடு 27,811 என நிலைத்தது.

    சென்ற இரு வாரங்களில் சென்செக்ஸ் 1,386 புள்ளிகள் ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இது 5.25 சதவீத உயர்வாகும்.

    தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 156 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 8,381 என நிலைத்தது. சென்ற இரண்டு வாரங்களில் நிஃப்டி குறியீடு 398 புள்ளிகள் உயர்வு பெற்றது. இது 4.99 சதவீத உயர்வாகும்.

    கடந்த வாரம் தேசிய பங்குச் சந்தையில் ரூ. 79,882.47 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ. 682.24 கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai