சுடச்சுட

  

  ரூ.2,500 கோடிக்கு பங்கு வெளியீடு: இண்டிகோ ஏர்லைன்ஸ் திட்டம்

  By புது தில்லி,  |   Published on : 28th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  INDIGO4

  பொதுப் பங்கு வெளியிடுவதன் மூலம் ரூ. 2,500 கோடி திரட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் திட்டமிட்டு வருகிறது.

  இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

  குர்கானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்டர்குளோப் என்டர்பிரைஸஸ் நிறுவனம், "இண்டிகோ' பெயரில் பயணிகள் விமான சேவையை இயக்கி வருகிறது. இதன் பங்குகள் முற்றிலும் மேம்பாட்டாளர்கள் கைவசமுள்ள நிலையில், முதல் முறையாக இந்நிறுவனம் பொதுப் பங்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

  இது தொடர்பாக பங்குச் சந்தைக்கு அளிக்க வேண்டிய அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

  பொதுப் பங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகக் கூடும் என்று என்று தெரிகிறது. இதன் மூலம் ரூ. 2,500 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  கடந்த மே மாதத்தில், நாட்டின் மொத்த விமானப் பயணிகள் எண்ணிக்கை 71.27 லட்சம் என்ற நிலையில், இண்டிகோ 27.69 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது. நாட்டின் பயணிகள் விமான சேவை சந்தையில் இண்டிகோ முதலிடத்தைப் பெற்றுள்ளது.

  தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான நிறுவனங்களில் இண்டிகோ, கோ-ஏர் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே லாபகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

  யு.எஸ். ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய ராகேஷ் கங்காவல், ராஹுல் பாட்டியா இணைந்து, 2006-ஆம் ஆண்டு உருவாக்கிய இண்டிகோ, குறைந்த கட்டண சேவை அளித்து வருகிறது. ஒரேயொரு விமானத்துடன் சேவை தொடங்கிய இந் நிறுவனம், கடந்த நிதி ஆண்டின் இறுதியில் 96 விமானங்களுடன் நாடு முழுவதும் சேவை அளித்து வருகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai