சுடச்சுட

    

    கடல் பகுதியில் காற்றாலைகள் அமைக்க சுஸ்லான் நிறுவனம் திட்டம்

    By  ராஜ்கோட்,  |   Published on : 30th June 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14

    காற்றாலைகள் தயாரிப்பு நிறுவனமான சுஸ்லான், கடல் பகுதியில் காற்றாலைகள் அமைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தது.
     குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான துளசி தந்தி தெரிவித்ததாவது:
     புதிய எஸ்-11 டர்பைன்கள் கொண்ட காற்றாலைகளைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். இதன் 111 மீட்டர் விட்டமுள்ள ரோட்டர் பிளேடுகள் மூலம், 20 சதவீதம் கூடுதல் மின்சாரத்தைப் பெற முடியும்.
     குஜராத்தின் கட்ச் பகுதியில், 1,100 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள காற்றாலைகளை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தது. அடுத்த கட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். அந்தக் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, அதன் மின்னுற்பத்தித் திறன் 2,000 மெகாவாட் ஆக இருக்கும். உலகின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தித் திட்டமாக அது திகழும். தற்போது, கடல் பகுதியில் காற்றாலைகள் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இவற்றை அமைப்போம். எனது சொந்த மாநிலமான குஜராத்தையொட்டிய கடல் பகுதியில் முதல் காற்றாலையை சுஸ்லான் அமைக்கவுள்ளது.
     கடல் பகுதியில் காற்றாலைகள் அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறோம் என்றார்.
     நாட்டில் காற்றாலைகள் மூலமாகக் கிடைக்கும் மின்சாரம் 23,000 மெகாவாட் ஆகும். இதில் சுஸ்லான் நிறுவனத்தின் பங்களிப்பு சுமார் 40 சதவீதமாகும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai