சுடச்சுட

    

    மருத்துவத் துறை குளிர்பதனப் பெட்டிகளின் விற்பனையைத் தொடங்கியது கோத்ரெஜ்

    By புது தில்லி,  |   Published on : 30th June 2015 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் குளிர் பதனப் பெட்டிகளின் விற்பனையை கோத்ரெஜ் நிறுவனம் தொடங்கியது.
     புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் கோத்ரெஜ் & பாய்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜம்ஷித் கோத்ரெஜ், பிரிட்டனின் ஷூர் சில் நிறுவனத் தலைவர் பீட்டர் சாண்டர்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     அறிமுக நிகழ்ச்சியில் ஜம்ஷித் கோத்ரெஜ் தெரிவித்ததாவது:
     கோத்ரெஜ் & பாய்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கோத்ரெஜ் அப்ளையன்சஸ், குளிர் பதனப் பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக சாதனங்களை உருவாக்கி வருகிறது.
     இப்போது மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் குளிர் பதனப் பெட்டிகளை உருவாக்கும் விதமாக, பிரிட்டனைச் சேர்ந்த ஷூர் சில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பயன்பாட்டுக்கான பல்வேறு குளிர் சாதன உபகரணங்களை உருவாக்குவதில் இந்த நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது.
     தகுந்த குளிர்பதன வசதி இல்லாததால், ஆண்டுதோறும் 15.10 கோடி தடுப்புப்பூசிகள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள் பயன்படுத்த முடியாமல் இழப்பு ஏற்படுகிறது. இவற்றின் மதிப்பு 750 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 4,725 கோடி). இப்போது தயாரிக்கத் திட்டமிட்டுள்ள மருத்துவத் துறைக்கான குளிர் பதனப் பெட்டிகளை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமக, இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளோம். இவற்றின் விலை ரூ. 65,000 முதல் ரூ. 1.35 லட்சம் வரை இருக்கும் என்றார் அவர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai