சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 166 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் குறியீடு 27,645-ஆக நிலைத்தது.
     கிரீஸ் பொருளாதாரம் தொடர்பான அச்சம் காரணமாக, பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் திரும்பப் பெறப்படலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ஒரு கட்டத்தில் சென்செக்ஸில் 602 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பின்னர், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐ.டி.சி., லார்ஸன் அண்ட் டூப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாக்டர் ரெட்டிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து, சென்செக்ஸ் சரிவு கட்டுப்படுத்தப்பட்டது.
     சென்செக்ஸில் பட்டியலிட்டுள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் இழப்பை சந்தித்தன. வீட்டு வசதித் துறை அதிகபட்ச இழப்பை சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இழப்பை நேரிட்டன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில் 1,809 நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்தது. 118 நிறுவனங்களின் பங்கு விலை லாபம் பெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 2,545.63 கோடியாகும்.
     தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 62 புள்ளிகள் குறைந்து நிஃப்டி குறியீடு 8,318 என நிலைத்தது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai