சுடச்சுட

    

    15 நிமிடங்களில் இரு சக்கர வாகனக் கடன்: எச்.டி.எஃப்.சி. வங்கி அறிவிப்பு

    By  புது தில்லி,  |   Published on : 30th June 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பதினைந்து நிமிடங்களில் இரு சக்கர வாகனக் கடனுக்கு ஒப்புதல் வழங்கவும், 30 நிமிடங்களில் ஆட்டோரிக்ஷா கடன் வழங்கவும் எச்.டி.எஃப்.சி. வங்கி புதிய முறையை அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்தது.
     இது தொடர்பாக அந்த வங்கியின் வாகனக் கடன் பிரிவின் துணைத் தலைவர் அசோக் கன்னா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
     ஆட்டோ ரிக்ஷா, இரு சக்கர வாகனங்கள் வாங்க விரும்புவோருக்கு உடனடியாகக் கடன் பெற ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகன விற்பனையகம் அல்லது எச்.டி.எஃப்.சி. வங்கி தொடர்பான எந்த மையத்திலும், தங்களது ஆதார் எண் விவரங்களையும் விரல் ரேகை அடையாளத்தையும் கடன் பெற விழைபவர் அளிக்கலாம். வாடிக்கையாளரின் கடன் பெறும் தகுதியைப் பொருத்து, மிகக் குறைந்த நேரம், குறைவான ஆவணங்கள் என்கிற வகையில் விரைவாக வாகனக் கடனுக்கான ஒப்புதல் வழங்கப்படும். இரு சக்கர வாகனக் கடனுக்கு 15 நிமிடத்திலும், ஆட்டோ ரிக்ஷா கடனுக்கு 30 நிமிடங்களிலும் ஒப்புதல் வழங்கப்படும். வங்கியின் வாடிக்கையாளர் அல்லாதவர்க்கும் கடன் வசதி அளிக்கப்படும்.
     வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை அளிக்கும் "கோ-டிஜிட்டல்' திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் புதிய நடவடிக்கை இதுவென அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai