Enable Javscript for better performance
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்கியது எல்.ஜி.- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்கியது எல்.ஜி.

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக உற்பத்தி செய்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களை புதுதில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
     மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதிய செல்லிடப்பேசிகளை அறிமுகம் செய்தார்
     நிகழ்ச்சியில் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கிம்-கி-வான் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உள்நாட்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தொடங்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையை எல்.ஜி. பெற்றுள்ளது. தற்போது, கே-வரிசையில் ரூ.9,500 மற்றும் ரூ.13,500 விலையில் இரண்டு வகை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதே எல்.ஜி. நிறுவனத்தின் இலக்கு என்றார் அவர்.
     ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
     உலக அளவில் மின்னணு சாதனங்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியா திகழ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai