Enable Javscript for better performance
யமஹாவின் \\\"சல்யூட்டோ-ஆர்எக்ஸ்\\\' மோட்டார் சைக்கிள் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    யமஹாவின் "சல்யூட்டோ-ஆர்எக்ஸ்' மோட்டார் சைக்கிள் அறிமுகம்

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய யமஹா மோட்டார் நிறுவனம் "சல்யூட்டோ-ஆர்எக்ஸ்' என்ற புதிய வகை பைக்கை வியாழக்கிழமை புது தில்லியில் அறிமுகம் செய்தது.
     இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஸாகி அஸானோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
     இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் யமஹா "சல்யூட்டோ-ஆர்எக்ஸ்' பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இப்புதிய மோட்டார்சைக்கிளில் 110சிசி திறனுள்ள என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, லிட்டருக்கு 82 கி.மீ. வரை மைலேஜ் தரவல்லது.
     "சல்யூட்டோ-ஆர்எக்ஸ்' பைக்கின் விலை ரூ.46,400-ஆக (புது தில்லி விற்பனையக விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
     யமஹா நிறுவனத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கான விநியோக கட்டமைப்பு விரிவாக்கத் திட்டத்துக்கு இப்புதிய வகை பைக்குகளின் அறிமுகம் பேருதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai