Enable Javscript for better performance
ரூ.2,000 கோடியில் விரிவாக்கம்: மைக்ரோமேக்ஸ் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.2,000 கோடியில் விரிவாக்கம்: மைக்ரோமேக்ஸ் அறிவிப்பு

    By  ஹைதராபாத்  |   Published on : 15th April 2016 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக மைக்ரோமேக்ஸ் தெரிவித்தது.
     தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராம ராவ், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆலையை ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியையொட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜேஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
     இந்திய செல்லிடப்பேசி சந்தையில் 2-ஆம் இடத்தில் தற்போது உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், மைக்ரோமேக்ஸின் அனைத்து சாதனங்களையும் உள்நாட்டில் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில், செல்லிடப்பேசி மட்டுமல்லாமல், அவற்றுக்குத் தேவையான பேட்டரி, சார்ஜர் ஆகிய அனைத்து துணைப் பொருள்களையும் இந்தியாவில் உருவாக்குவோம்.
     நிறுவனத்துக்கு ராஜஸ்தானில் ஏற்கெனவே ஓர் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு மேலும் ஒர் ஆலையும், மத்திய பிரதேசத்தில் புதிய ஆலையும் அமைக்கவுள்ளோம். புதிதாக அமையவுள்ள ஆலைகளில், செல்போன், டிவி தயாரிக்கப்படும். இந்த ஆண்டு அவை செயல்படத் தொடங்கும். ரூ. 2,000 கோடியில் விரிவாக்கம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய செல்லிடப்பேசி தயாரிப்பாளராக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் திகழும் என்றார். ஹைதராபாதில் 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைக்ரோமேக்ஸ் ஆலையில் செல்லிடப்பேசி, எல்.இ.டி. டிவி, எல்.இ.டி. பல்பு உள்ளிட்ட சாதனங்கள் தயாரிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai