Enable Javscript for better performance
பவுனுக்கு ரூ. 360 அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    gold

    gold

    ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 360 அதிகரித்து விற்பனையானது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை ரூ. 24 ஆயிரத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால், யூரோ பணத்தைக் பலர் தங்கமாக மாற்றி வருகின்றனர். இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
    இதுதவிர பல்வேறு நாடுகளும் யுரோவை அமெரிக்க டாலர்களாக மாற்றி வருகின்றனர். இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தும், இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவையும் கண்டுள்ளது. இந்த இரு காரணங்களால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
    சென்னையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து, ரூ.2,973-க்கு விற்பனையானது.
    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 15 அதிகரித்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 43,480-க்கு விற்பனையானது.
    திங்கள்கிழமை விலை நிலவரம்(ரூபாயில்):
    ஒரு கிராம் தங்கம்    2,973
    ஒரு பவுன் தங்கம்    23,784
    ஒரு கிராம் வெள்ளி    46.50
    ஒரு கிலோ வெள்ளி    43,480

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai