Enable Javscript for better performance
பிர்லா கார்ப்பரேஷன் லாபம் இரண்டு மடங்கு உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    birla

    எம்.பி. பிர்லா குழுமத்தின் அங்கமான பிர்லா கார்ப்பரேஷன் இரண்டாம் காலாண்டு லாபம் இரண்டு மடங்கு அதிகரித்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பிர்லா கார்ப்பரேஷன் வருவாய் ரூ.886.75 கோடியாக இருந்தது. கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டு இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.927.14 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.இருப்பினும், நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.899.46 கோடியிலிருந்து குறைந்து ரூ.843.28 கோடியாக காணப்பட்டது. இதையடுத்து, நிகர லாபம் ரூ.23.20 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.58.43 கோடியாக இருந்தது என்று பிர்லா கார்ப்பரேஷன் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai