Enable Javscript for better performance
பொருளாதார நடவடிக்கை பாதிப்பு: மூடீஸ்- Dinamani

சுடச்சுட

    

    கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.500, ரூ.1,000 கரன்ஸிகள் செல்லாது என்ற அறிவிப்பு பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறும்போது: உயர் மதிப்பு கரன்ஸிகள் செல்லாது என்ற மத்திய அரசின் இந்த முடிவு குறுகிய கால அளவில் பொருளாதரா வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், நீண்ட காலத்தை கணக்கில் கொள்ளும்போது மத்திய அரசின் இந்த முடிவு வரி வருவாயை ஊக்குவிப்பதுடன், நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள வழிவகுக்கும் என்று மூடீஸ் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai