Enable Javscript for better performance
"அலைக்கற்றை ஏலம்: 700 மெகா ஹெர்ட்ஸ் விலை மிக அதிகம்'- Dinamani

சுடச்சுட

    

    அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலை மிக அதிகம் என்று இந்திய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
    அக். 1-ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு அலைவரிசைகளில் விற்பனையான அலைக்கற்றை மூலம் ரூ. 65,789 கோடி பெறப்பட்டது. இதுவரை நாட்டில் நடைபெற்ற ஏலத்தில் மிகப் பெரிது என்ற கூறப்பட்ட இதன் மூலம் ரூ. 5.6 லட்சம் கோடி திரட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
    மேலும் 4ஜி அலைவரிசை உள்ளிட்ட பல்வேறு அலைவரிசைகளில் 60 சதவீத அளவுக்கு அலைக்கற்றை விற்பனையாகவில்லை. குறிப்பாக, மொத்தம் ரூ. 4 லட்சம் கோடி ஈட்டும் என்று கூறப்பட்ட, அதிகத் திறன் வாய்ந்த 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை விற்பனையாகவில்லை. அதற்கான அடிப்படை விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாக இந்திய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்தது.
    ஏர்டெல் நிறுவனம் இது குறித்துக் கூறுகையில், அதிகத் திறன் வாய்ந்த அந்த அலைவரிசை மூலம் நாடு பயன் பெற வேண்டுமானால் அதன் விலையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai